-
'ஒத்த பதிற்றுப்பத்து' எனச் சிறப்பிக்கப்படும் எட்டுத்தொகை நூல் பண்டைத் தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் புலப்படுத்தும் தலைசிறந்த இலக்கியமாகும். இந்நூல் சங்க காலச் சேர மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதெனினும் தமிழ் நிலத்திற்கே பொதுவான இயற்கைக் கூறுகளையும் தமிழ் மக்களின் அகப்புற வாழ்க்கையையும் உள்ளடக்கியதாகும். பல்வேறு கண்ணோட்டங்களில் ஆராயப்படுவதற்குரிய அரிய பல செய்திகள் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
- முனைவர் க.இராமசாமி ( செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் )
-
பதிற்றுப்பத்து ஆய்வில் ஒரு திருப்புமுனை : " பதிற்றுப்பத்து ; கலையியல் மற்றும் சமூக இயல் நோக்கில் " எனும் முகப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கரு.அழ.குணசேகரன் படைத்துள்ள மூலமும் உரையும் எனும் நூல் பதிற்றுப்பத்து உரை விளக்க வரலாற்றில் ஒரு திருப்பு முனை.
- முனைவர் க.ப.அறவாணன் ( முன்னாள் துணைவேந்தர் )